பதிவு செய்த நாள்
18
ஜூன்
2018
01:06
கடத்தூர்: தர்மபுரி மாவட்டம், கடத்தூரில் உள்ள காளியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று துவங்கி, நான்கு நாட்கள் நடக்கிறது. நாளை, அம்மனுக்கு, ஆராதனையும், கூழ் ஊற்றுதலும் நடக்கிறது. நாளை மறுநாள் காலை, அம்மனுக்கு பொங்கல் வைத்தல், பிடாரியம்மன் கோவிலில் இருந்து, அலகு குத்துதல் நடக்கிறது. வரும், 21ல், அம்மன் பவனி, பூமிதித்தல் தொடர்ந்து, அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல் நடக்கிறது.