பெரியகுளம், வடுகபட்டியில் பழனிஆண்டவர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக கணபதி ேஹாமத்துடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. சிதம்பரசிவாச்சாரியார், கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். ஏற்பாடுகளை தலைவர் சோமசுந்தரம், துணைத்தலைவர் அழகர் , பழனி ஆண்டவர் பங்காளிகள் செய்திருந்தனர். கம்பம் ராமலிங்கம் பிள்ளை அறக் கட்டளை நிறுவனர் பாஸ்ரகன் அன்னதானம் வழங்கினார்.