கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன் சமேத மங்களநாதர் சுவாமி கோயிலில் உற்ஸவர் சிவகாமி அம்மன் சமேத நடராஜருக்குஅபிஷேக ஆராதனை நடந்து வருகிறது. மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆருத்ரா தரிசனத்தில்பச்சை மரகத நடராஜருக்கு அபிஷேகம் நடக்கும். நேற்று அதிகாலை 4:00 மணியளவில் பிரம்ம முகூர்த்தத்தில்ஆனி உத்திரத்தை முன்னிட்டு,உற்சவர்களுக்கு 21 வகையான அபிஷேக ஆராதனை நடந்தது.