திருவாடானை: திருவாடானை அருகே கோடனுார் கண்மாய்க்குள் நேற்று அதிகாலை ஆடு மேய்க்க சென்றவர்கள் புதருக்குள் விநாயகர் கற்சிலை இருப்பதை பார்த்தனர். 3 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட அச் சிலை சில இடங்களில் சேதமடைந்திருந்தது. கிளியூர் குரூப் வி.ஏ.ஓ. கார்த்திக்சிலையை மீட்டு திருவாடானை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தார்.