பதிவு செய்த நாள்
22
ஜூன்
2018
11:06
திருப்பூர்:திருப்பூர், பலவஞ்சிபாளையம் ஸ்ரீ காளிகுமார சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா வரும், 25ல் நடக்கவுள்ளது.கோவிலில் நடந்து வந்த திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, இன்று முதல் கும்பாபிஷேக விழா பூஜை நிகழ்ச்சிகள் துவங்குகின்றன. விநாயகர் வழிபாடு, கணபதி கலச ஸ்தாபனம், பூர்ணாகுதி, வேள்விகள் இன்று நடக்கிறது. நாளை (23ம் தேதி) அக்னி சங்கிரஹனம், தீர்த்தம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலம், கோ பூஜை, சிறப்பு அபிஷேக பூஜை ஆகியன நடைபெறுகிறது. வரும், 24 ம் தேதி, காலை அஷ்டதிக் பாலகர் மற்றும் கோபுரம் கலசம் வைக்கப்படுகிறது.
நான்கு கால யாக பூஜை முடிந்த பின், 25ம் தேதி, காலை, 6:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, நாடிசந்தானம், தீபாராதனை நடக்கிறது. அன்றைய தினம் காலை, 9:30 முதல், 10:30 மணிக்குக்குள், ஸ்ரீ காளி குமார சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதில், மடாலய ஆதீனங்கள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பலர் பங்கேற்கின்றனர். மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில், சுவாமி புறப்பாடு, மகா அபிஷேக நிகழ்ச்சி நடக்கிறது. 28ம் தேதி வரை இரவில் கலைநிகழ்ச்சி, பட்டிமன்றமும், கும்பாபிஷேகம் நிறைவு பெற்ற பின், 48 நாள் மண்டல அபிஷேக பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவையொட்டி, அன்று காலை, 8:00 மணி முதல், அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ காளி குமாரசுவாமி கோவில் டிரஸ்ட் மற்றும் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.