பதிவு செய்த நாள்
23
ஜூன்
2018
12:06
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த நரையூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜபெருமாள் கோவிலில், கும்பாபிஷேக விழா நடந்தது. விழுப்புரம் அடுத்த வளவனுார் அருகே உள்ள நரையூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜபெருமாள் கோவிலில், கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 20ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை முதல் காலம் புண்யாஹம்ச, அக்னி பிரதிஷ்டை அகல்மஷ ேஹாமம் நடந்தது. தொடர்ந்து, 21ம் தேதி காலை 7:30 மணிக்கு இரண்டாம் கால புண்யாகவசனம், கும்ப ஆராதனம் மகா சாந்தி ேஹாமம், கோபுர கலச ஸ்தாபனம், அஷ்டபந்தனம் சாற்றுதல் மற்றும் மாலை 4:30 மணிக்கு திருமஞ்சனம், ப்ரதானமூர்த்தி ேஹாமம், பூர்ணாஹூதி நடந்தது. இதையடுத்து, நேற்று காலை 6:30 மணிக்கு விஸ்வரூபம் திருபள்ளி எழுச்சி, கோ பூஜை, கடம் புறப்பாடு மற்றும் காலை 9:30 மணிக்கு கோபுர கலச கும்பாபிஷேகம் நடந்தது. பின், மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 8:00 மணிக்கு வீதியுலா புறப்பாடு நடந்தது. விழா ஏற்பாடுகளை நரையூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.