வீரபாண்டி: சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில், பெரிய திருவடியான கருடாழ்வார் ஜெயந்தி விழா, நேற்று கொண்டாடப்பட்டது. பெருமாளுக்கு சேவை செய்வதில் முதன்மையான கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேயருக்கு பெரிய திருவடி, சிறிய திருவடி என்ற சிறப்பு பெயர்கள் உண்டு. சேலம், கோட்டை பெருமாள் கோவிலில், நேற்று கருட ஜெயந்தி கொண்டாடப்பட்டது. காலை, 10:00 மணிக்கு பெருமாள் சன்னதிக்கு எதிரில் உள்ள, கருடாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து, பலவித மலர் மாலைகளால் அலங்கரித்து பூஜை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை, பெருமாள் கருடசேவையில் எழுந்தருளி, வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை, கவுதம் பட்டாச்சாரியார் உள்ளிட்ட கட்டளைதாரர்கள் செய்தனர்.