சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூரில் நாளை ஜூன். 26 ம் தேதி ஆனித் தேரோட்டம் நடக்கிறது.சிவகங்கை தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலின் ஆனித்திருவிழா ஜூன் 18 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி அம்பாளுடன் வீதிவுலா நடக்கிறது. . 8 ம் நாளான இன்று ஜூன் 25 ம் தேதி மாலை மீனாட்சி சொக்கநாதருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.இதற்காக பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கப்பட்டு வருகிறது. நாளை ஜூன் 26 ம் தேதி ஆனித்தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி மாலை 5:00 மணிக்கு மீனாட்சி சொக்கநாதர் ஒரு தேரிலும், பிரியாவிடை அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளி ரத வீதிகளை வலம் வருவர். திருவிழாவின் கடைசி நாளான ஜூன் 27 ல் தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை முறையூர் கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.