பதிவு செய்த நாள்
25
ஜூன்
2018
12:06
சேத்துப்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு போளூர் சாலையில் உள்ள அந்தோனியார் கோவில், 35ம் ஆண்டு பெரு விழா, நேற்று முன்தினம் நடந்தது. இதை முன்னிட்டு, தூய லூர்து அன்னை ஆலய பங்கு தந்தை விக்டர் இன்பராஜ் தலைமையில், சிறப்பு திருப்பலி நடந்தது. நேற்று முன்தினம் இரவு, மலர்களாலும், மின்சார விளக்குகளாலும், அலங்கரிக்கப்பட்ட தேரில், புனித அந்தோனியார் தேர் வீதி உலா வந்தது. செல்லும் வழியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், சாம்பிராணி தூபமிட்டு மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர்.