சோழபுரம் அருள்மொழிநாதர் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2018 03:06
சிவகங்கை: சிவகங்கை அருகே சோழபுரம் அறம்வளர்ந்தநாயகி, அருள்மொழிநாதர் கோயிலில் ஆனி திருவிழாவை முன்னிட்டு, சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
சிவகங்கை அருகே சோழபுரத்தில் பழமையான அறம்வளர்த்த நாயகி அம்பாள், அருள்மொழிநாதர் கோயில் உள்ளது. இங்கு, பிரதோஷத்தன்று சிவனுக்கும், நந்திக்கும் சிறப்பு வழிபாடு நடைபெறும். சிவகங்கை மற்றும் சுற்றுப்புற கிராமத்தினர் சிவனை வழிபட்டு செல்கின்றனர். இக்கோயில் ஆனித்திருவிழா ஜூன் 18ல் கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்பாள் காலை, மாலையில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். விழாவின் 8ம் நாளான இன்று(ஜூன் 25ல்) திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. சுவாமி அம்பாளுடன் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.