ஆத்தூர்: சந்துமலை, திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். வாழப்பாடி அருகே, புழுதிக்குட்டை, சந்துமலை பகுதியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்றுமுன்தினம் முதற்கால பூஜை நடந்தது. நேற்று காலை, யாகசாலை பூஜையை தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. திரவுபதி அம்மன், விநாயகர், போத்தராஜா ஆகிய சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.