ஊத்துக்கோட்டை: கொரக்கந்தண்டலம் கிராமத்தில் நடந்த வாளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.பூண்டி ஒன்றியம், கொரக்கந்தண்டலம் கிராமத்தில் வருணேஸ்வரி அம்பாள் சமேத வாளீஸ்வரர் கோவில் உள்ளது. சிதிலமடைந்து காணப்பட்ட இந்த கோவில், பக்தர்கள் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்டு அனைத்து பணிகளும் முடிந்தன.நேற்று காலை, 9:30 மணிக்கு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது.