பதிவு செய்த நாள்
26
ஜூன்
2018
01:06
வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், அரசு, தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு, விரைவில் பதவி உயர்வு கிடைக்கவும், பணி இட மாற்றத்தால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கவும், நேற்று காலை, 10:00 மணிக்கு, இந்திராஸ்திர ஹோமம் நடந்தது. வாஸ்து பகவானுக்கும், பஞ்ச பூதங்களுக்கும், இந்திர தேவனை வழிபடும் விதத்தில், இந்திர ஹோமம் நடந்தது. இதில், சிறப்பு அலங்காரத்தில், இந்திர பகவான் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு, வாஸ்து பகவான் அருள் என்ற புத்தகத்தை, முரளிதர சுவாமிகள் வழங்கினார்.