வடமதுரை, வடமதுரை பேரூராட்சி அத்திகுளத்துபட்டியில் எல்லம்மாள், கருப்பணசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை தீர்த்தம், முளைப்பாரி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு முதல் கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜைகள் முடிந்ததும், கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது. வி.மேட்டுப்பட்டி பெரியதனக்காரர் ராம்பிரசாத் தலைமை வகித்தார். துாங்கணம்பட்டி ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயில் அர்ச்சகர் ஜெகநாதன் தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். மேட்டுப்பட்டி, நாடுகண்டானுார், நரசிங்கபுரம், கன்னிமார்பாளையம், அத்திகுளத்துபட்டி, கொல்லப்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.