சென்னிமலை முருகன் கோவிலில் தீர்த்தம் கொண்டு செல்ல புதிய காளைக்கு பயிற்சி
பதிவு செய்த நாள்
26
ஜூன் 2018 06:06
சென்னிமலை: சென்னிமலை, முருகன் கோவிலுக்கு படிக்கட்டு வழியாக, திருமஞ்சன தீர்த்தக்குடம் கொண்டு செல்வதற்காக, புதியதாக மீண்டும் ஒரு பொதிகாளைக்கு, நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை முருகன் கோவிலுக்கு, மலை அடிவாரத்தில் உள்ள தீர்த்தக் கிணற்றில் இருந்து தினமும் காலை, 8:00 மணிக்கு பொதி காளைகள் மூலம், 1,320 படிக்கட்டு வழியாக தீர்த்தக்குடங்கள் கொண்டு செல்வது வழக்கம்.
ஒரு காளைக்கு வயதாகிவிட்டதால், படி வழியாக செல்ல சிரமப்பட்டது. இதையடுத்து, சண்முகம் என்ற பெயர் கொண்ட காளைக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர், பெருந்துறை, எம்.எல்.ஏ., தோப்பு வெங்கடாச்சலம், தானமாக கொடுத்த சிங்கார வேலன் என்ற பெயர் கொண்ட காளைக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில், முருகன் என்ற பெயருடைய காளை மாட்டுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, நேற்று பட்டிக்கட்டுகள் வழியாக அழைத்து சென்றனர். மூன்று காளைகளும், எளிதாக படிக்கட்டு வழியாக ஏறி சென்றன.
|