திரவுபதியம்மன் கோவிலில் 60 ஆண்டுக்கு பிறகு தீமிதி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூன் 2018 01:06
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே திரவுபதியம்மன் கோவிலில், 60 ஆண்டுகளுக்கு பின், தீமிதி விழா நடந்தது. திருக்கோவிலுார் அடுத்த சி.மெய்யூர் திரவுபதி அம்மன் மற்றும் அரவான் சுவாமிகளின் 10 நாள் விழா, கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி பாரத கதைகள் நடந்து வந்தது. கடந்த 19ம் தேதி முதல்நாள் விழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9ம் நாளான நேற்று காலை 7:00 மணிக்கு‚ அரவான் விஸ்வரூபத்தில் தேர்வடிவில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. மாலை கரகம்‚அலங்கரிக்கப்பட்ட அம்மன் தீக்குண்டத்தில் இறங்கினர். தொடர்ந்து வேண்டுதல் உள்ள பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கடந்த 60 ஆண்டுகளுக்குபிறகு நடந்த இவ்விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.