ராஜபாளையம், ராஜபாளையத்தில் மாயூரநாதர் சுவாமி கோயில் ஆனி தேரோட்டத்தில் திரளான பக்தர்கள்கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட அஞ்சல் நாயகி உடனுறை மாயூரநாதர் சுவாமி கோயில் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 8 நாட்களும் மண்டகப்படி தாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் அம்மன், சுவாமி வீதி உலாநடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. சத்திரப்பட்டி, சேத்துார், தளவாய்புரம்உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். ரத வீதிகளை கடந்து நிலைக்கு திரும்பியது. ஏற்பாடுகளை கேயில் செயல் அலுவலர் நாராயணி(பொறுப்பு) தலைமையில் பல்வேறு அமைப்பினர் செய்திருந்தனர்.