பதிவு செய்த நாள்
28
ஜூன்
2018
01:06
சாத்துார், சாத்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கும்பாபிேஷகம் நடந்தது .இதையொட்டி யாகசாலை பூஜை கடந்த வெள்ளியன்று கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. ஐந்நாம் நாள் சுப்பிரமணியசுவாமி, தெய்வானை, வள்ளி, விநாயகர், மற்றும் நவக்கிரகங்களுக்கு கும்பாபி ேஷகம் நடந்தது. வேத மந்திரம் முழங்க பட்டர்கள் கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர். பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு ஆரோகரா என கோஷமிட்டு வணங்கினர்.இதன் பின் சுவாமிக்கு சிறப்புபால் அபிேஷகம், பன்னீர், பஞ்சாமிர்தம் அபி ேஷகம் செய்ய தீபா ராதனை நடந்தது. பல்வேறு கிராம பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் தக்கார் சொக்கலிங்கம் தலைமையில் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். விநாயகர் கோயில்: காரியாபட்டியில், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. மதுரை மண்டல நிர்வாக இயக்குனர் இளங்கோவன், கிளை மேலாளர் மாரியப்பன், அருப்புக்கோட்டை கிளை மேலாளர் ஸ்ரீநிவாசன், மண்டல செயலாளர் குருசாமி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் செல்வக்குமார், தொ.மு.ச., செயலாளர் சுந்தரம் மற்றும் அனைத்து போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ,பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.