பதிவு செய்த நாள்
29
ஜூன்
2018
01:06
வாலாஜாபேட்டை: இயற்கை வளம், நாடு நலம், மழை வளம் வேண்டி, கொடிய நோய்கள், பஞ்சமா பாதகங்களில் இருந்து விடுபட, வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், நேற்று, கந்தர்வ ராஜ ஹோமம், சந்தான கோபால ?ஹாமம் நடந்தது. தொடர்ந்து, சிதம்பரம் தீட்சிதர்களை கொண்டு, ஏகாதசி ருத்ர யாகம், சுயம் வர பார்வதி யாகம் நடந்தது. பின், மரகதீஸ்வரருக்கு, மஹா அபிஷேகம் நடந்தது. முரளிதர சுவாமிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.