பதிவு செய்த நாள்
29
ஜூன்
2018
01:06
கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி அடுத்துள்ள, ஆவல்நத்தம் கிராமத்தில், நூற்றாண்டு பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. தினமும், கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநில பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலுக்கு செல்லும் தார்ச்சாலை, கடந்த, ஓராண்டாக சேதமாகி, ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. கோவிலுக்கு இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோர், அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல நேரங்களில், கூரான கற்கள் வாகனங்களை பஞ்சராக்குவதால், வெளிமாவட்ட, மாநில பக்தர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். சாலையை, சீரமைக்க வேண்டும்.