பதிவு செய்த நாள்
02
ஜூலை
2018
11:07
சோமங்கலம்: சோமங்கலம் சுந்தரராஜ பெருமாள் கோவிலில், கருட சேவை உற்சவம், நேற்று நடந்தது. ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, சோமங்கலம் கிராமத்தில், 1,000 ஆண்டு கள் பழமை வாய்ந்த சவுந்தரவல்லி தாயார் சமேத சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. ஆனி மாதம், திருவோணத்தை முன்னிட்டு, சுந்தரராஜ பெருமாளுக்கு, நேற்று முன்தினம், திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை, கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.