பதிவு செய்த நாள்
02
ஜூலை
2018
11:07
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில், நேற்று நடந்த மகா கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவில் புதுப்பிக்கும் பணிகள் முடிவடைந்து, கும்பாபிஷேக விழா, கடந்த, 27ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, மூன்று கால யாக பூஜைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் நான்காம் கால வேள்வி பூஜை, வேதமந்திர ேஹாமம், பூர்ணாஹுதி, தீபாராதனையும்; அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் பூஜையும்; ஐந்தாம் கால வேள்வி, காயத்ரி மந்திர ேஹாமம், மூலஸ்தானத்தில் தீபஸ்தானம் உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றன. நேற்று காலை, 5:35 மணிக்கு ஆறாம் கால வேள்வி ஜபம் ேஹாமம் துவங்கியது. காலை, 11:00 மணிக்கு விமானம், காலை, 11:10 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.