தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையில் அலைமோதிய பக்தர் கூட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2012 11:01
வத்திராயிருப்பு : பூலோக கயிலை என பக்தர்களால் அழைக்கப்படும் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலில் தை அமாவாசை விழா நடந்தது. தமிழகத்தின் புகழ்பெற்ற சிவஸ்தலமான சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்க சுவாமி கோயில்களில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் இருந்தே மலையில் இதற்கான பூஜைகள் துவங்கின. முதல்நாள் பரிசுத்த பூஜைகளும், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. நேற்று அமாவாசையை முன்னிட்டு அதிகாலையில் சுவாமிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கான சிறப்பு வழிபாடும், சங்கொலி பூஜைகளும் நடந்தது. மதியத்திற்கு மேல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் அன்னதானம் வழங்கினர்.