பதிவு செய்த நாள்
03
ஜூலை
2018
11:07
ஈரோடு: ஈரோடு, காவேரி ரோட்டில் கட்டப்பட்ட, விஸ்வரூப சீரடி சாய்பாபா கோவில் கும்பாபி?ஷகம் நடந்தது. கடந்த, 28ல் விநாயகர் வழிபாட்டுடன், கும்பாபி?ஷக பூஜைகள் துவங்கி, யாக பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை, நான்காம் யாகபூஜை, கலச புறப்பாடு நடந்தது. இதை தொடர்ந்து பஞ்சமுக விநாயகர், பாணலிங்கேஸ்வரர், தத்தாத்ரேயர், பக்த ஆஞ்சநேயர், சீரடி சாய்பாபா விமான கலசம், விஸ்வரூப சீரடி சாய்பாபா பிம்பத்துக்கும் கும்பாபி?ஷகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. சாய் வாகினி அறக்கட்டளை தலைவர் சிவநேசன் தலைமை வகித்தார். பெங்களுரு டாடா நிறுவன துணைத்தலைவர் கிரீஷ் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். அறக்கட்டளை இயக்குனர்கள் கணேசன், வைத்தீஸ்வரன், பத்மாவதி, சாரதாம்பாள், மஞ்சுஸ்ரீ ஏற்பாடுகளை செய்தனர்.