பதிவு செய்த நாள்
04
ஜூலை
2018
01:07
பவானி: சங்கமேஸ்வரர் கோவில், தங்கும் விடுதியின் சுற்றுச்சுவர் உடைந்துள்ளது. இதனால் இரவில் தங்கும், பக்தர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பவானி சங்கமேஸ்வரர் கோவில், ராஜகோபுரம் முன் பகுதியில், பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக, விடுதி உள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ளது. விடுதியை சுற்றி, சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு பகுதியில் சுவர் உடைந்து, கனரக வாகனம் நுழையும் அளவுக்கு, சந்து போன்ற இடைவெளி உருவாகியுள்ளது. ஓராண்டுக்கு மேலாகியும், சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், விடுதியில் தங்கும் பக்தர்களின், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. முறையாக பராமரிப்பு செய்யாததால், செடிகள் வளர்ந்து புதர் போல் காணப்படுகிறது. விஷ ஜந்துக்கள் நடமாட்டத்துக்கும் வாய்ப்புள்ளது. கோவில் நிர்வாகம், மெத்தனம் காட்டாமல், உரிய நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.