பதிவு செய்த நாள்
04
ஜூலை
2018
01:07
குளித்தலை: குளித்தலை அடுத்த, புத்தூர் அருகே, சின்னபுத்தூரில், செல்வவிநாயகர், காளியம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவில்களை, கிராம பொதுமக்கள் சார்பில், புதுப்பிக்கும் பணி நடந்தது. பணி முடிந்து, கடந்த ஜூன், 30ல் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அன்று காலை, குளித்தலை கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து பால் குடம், தீர்த்தக் குடங்களை எடுத்து பக்தர்கள் ஊர்வலம் வந்தனர். முதல் நாள், விக்னேஸ்வரர் பூஜை, யாகசாலை பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை, கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.