பதிவு செய்த நாள்
04
ஜூலை
2018
01:07
குளித்தலை: குளித்தலை அடுத்த, அய்யர்மலை கிரிவலப்பாதை அருகே, வித்யாபராஷோடசீ கோவில் கும்பாவிஷேகவிழா, நேற்று நடந்தது. கடந்த ஜூன், 28 காலை, கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. மறுநாள் காலை, நவக்கிரக பூஜை, மாலையில் சாந்தி ஹோமம் நடந்தது. 30ல், யாக சாலைப் பிரவேசம், வருண யாகம் முதலான பூஜைகள் நடந்தன. அன்று மாலை, முதல் கால யாக பூஜை, கடந்த, 1ல் இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு, கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், ஆயிரக்கணக்காண பக்தர்கள் பங்கேற்றனர்.