பாகூர்:அரங்கனூரில் உள்ள முத்தாலம்மன் மற்றும் எரமுடி ஐயனார் கோவில்களின் கும்பாபிஷேக விழா நடந்தது.இதனையொட்டி கடந்த 29ம் தேதி விக்னஷே்வர பூஜை, கோ பூஜை, கணபதி பூஜை நவக்கிரக பூஜை, முதல்கால பூஜை நடந்தது. தொடர்ந்து 30ம் தேதி 2 மற்றும் 3ம் கால பூஜையும் நடைபெற்றது. 1ம் தேதி, 3ம் கால பூஜை செய்யப்பட்டு 8.00 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது.இதனை தொடர்ந்து, முத்தாலம்மன் மற்றும் ஏரமுடி ஐயனார் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவில், முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, பாகூர் தாசில்தார் கார்த்திகேயன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.