கீழக்கரை, திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் டி.வி.எஸ்., நிறுவனக்குழுமத்தின் சார்பில் உழவாரப்பணிகள் நடந்தது. பத்மாஸனித்தாயார் சன்னதி, தர்ப்பசயன ராமர், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளிட்ட உள்பிரகாரம், வெளி பிரகாரம், துாண்களில் துாய்மை செய்யும் பணி நடந்தது. சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சனேயர் கோயிலில் தன்னார்வலர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாக செயலாளர் சுவாமிநாதன், செயல் அலுவலர் ராமு, பஷே்கார் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.