பண்ருட்டி: பண்ருட்டி ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, உற்சவர் சீதா ராமர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பண்ருட்டி அருள்ஜோதி நகர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் 5ம் தேதி காலை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் சீதாராமர் திருக்கல்யாண மகோற்சவம், உபன்யாசம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.