பெண்ணாடம்: பெண்ணாடம் வடக்குரத வீதியில் உள்ள கற்பூர விநாயகர் கோவிலில் முதலாமாண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 5:30 மணியளவில் மூலவர் விநாயகர் சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை 6:00 மணியளவில் முதல் கால யாகசாலை பூஜை, 7:00 மணியளவில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, காலை 8:00 மணியளவில் கலசாபிஷேகம், 9:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள மூலவர் கற்பூர விநாயகர், முருகர் சுவாமிகளுக்கு புனிதநீர் ஊற்றி வருஷாபிஷேக விழா நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.