பதிவு செய்த நாள்
12
ஜூலை
2018
12:07
வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதர் சன்னதியில், நேற்று முன் தினம், 6:00 மணிக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது.சிவபெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், திருநீறு, குங்குமம், பஞ்சாமிர்தம், அரிசிமாவு என, 16 வகையான அபிேஷக ஆராதனை நடந்தது. அதன் பின், மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் காசிவிஸ்வநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதி பக்தர்கள் பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்று, காசிவிஸ்வநாதரையும், நந்தியையும் வழிபட்டனர்.