பதிவு செய்த நாள்
13
ஜூலை
2018
12:07
செங்கல்பட்டு: செங்கல்பட்டு, பெரிய நத்தம் பகுதியில், சேப்பாட்டி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின், இந்த ஆண்டு இராபிறையார் உற்சவம் மற்றும் தேரோட்ட விழா, அம்மனுக்கு
காப்பு கட்டி, 10ம் தேதி துவங்கியது.
நேற்று (ஜூலை 12)ல் , இராபிறையார் அம்மன் வீதியுலா நடைபெற்றது. நாளை (ஜூலை 14)ல் காலை, 7:00 மணிக்கு, தேரோட்டம் துவங்குகிறது.கோவில் பகுதியில் புறப்படும் தேர், பாலசுந்தரனார் தெரு, மேட்டுத்தெரு, பெரியரத்தின செட்டித்தெரு, ஜி.எஸ்.டி., சாலை உள்ளிட்டவை வழியாக, நகராட்சி அலுவலகம் அருகே நிறுத்தப்படும்.
அங்கிருந்து, வரும், 15ல், காலை, 7:00 மணிக்கு, காஞ்சிபுரம் ஐரோடு, தனியார் மருத்துவமனை அருகே, மதுரைவீரன் கோவில் கிராமத்தினர் சார்பில், தேருக்கு, கும்பல் போடுதல் விழா நடைபெறும். அதன்பின், தேர் நிலைக்கு வந்தடையும். 17ல், விடையாற்றிஉற்சவம் நடைபெறும்.