புதுச்சேரி: ஹஜ் பயணிகள் 129 பேருக்கு, முதல்வர் நிவாரண நிதியில் இருந்து நிதி வழங்கப் படும் என சட்டசபையில் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
சட்டசபையில் முதல்வர் பேசியதாவது;
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், அதன் கட்டுப்பாட்டில் உள்ள 16 கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. சுற்றுலாத்துறை சார்பில், வில்லியனுர் திருக்காமீஸ்வரர் கோவில், கங்கைவராகநதீஸ்வரர் கோவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருநள்ளாறு கோவில் தேர் புனரமைக்கப்பட்டு வருகிறது. காரைக்கால் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாய த்தில் காவிரி புஷ்கர் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்கு முதல்வர் நிதியில் இருந்து நிதி வழங்க ஏற்பாடு செய்யப்படும். கோவில்களில் உள்ள தங்கம், வெள்ளி நகைகள், அசை யும், அசையா சொத்துக்கள் ஆவணப்படுத்தப்படும்.
ஹஜ் பயணிகள் 129 பேருக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து நிதி கொடுக்கப்படும். ரம்ஜான் சமயத்தில் 30 மசூதிகளுக்கு, ரூ.30 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது, வக்பு வாரியம் குறுகிய காலத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.