நான்குநேரி பெருமாள் கோயிலில் ஒருகோட்டை எண்ணெய் காப்பு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜன 2012 11:01
நான்குநேரி :நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் ஒருகோட்டை எண்ணெய் காப்பு விழா நடந்தது. நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று ஒருகோட்டை எண்ணெய் காப்பு விழா நடப்பது வழக்கம். இதையொட்டி கடந்த 19ம் தேதி முதல் தினமும் காலையிலும், மாலையிலும் லட்சார்ச்சனை, அதன்பின் தீர்த்த வினியோக கோஷ்டி நடந்தது. நேற்று ஒருகோட்டை எண்ணெய் காப்பு விழா நடந்தது. நேற்று காலை 7.45 மணிக்கு திருமஞ்சன கும்பம் மாடவீதி வலம் வருதல், 8.15 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 9 மணிக்கு பெருமாளுக்கு ஒருகோட்டை எண்ணெய் காப்பு நடந்தது. அதன்பின் 11 மணிக்கு சங்காபிஷேகம், திருமஞ்சனம், கும்பாபிஷேகம், மதியம் 1.30 மணிக்கு சாற்றுமறை, தீர்த்த வினியோக கோஷ்டி நடந்தது. இரவு 10 மணிக்கு பத்ரதீப புறப்பாடு, 12 மணிக்கு பெருமாள் தாயார், ஆண்டாள் திருவீதி புறப்பாடு நடந்தது. இன்றும் (24ம் தேதி), நாளையும் (25ம் தேதி) கிருஷ்ணன் கோயில் அருகேயுள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீவரமங்கை நாச்சியார் பக்த சபாவினர் செய்து வருகின்றனர்.