Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்போரூர் முருகன் கோவில் ... செங்கல்பட்டு பெரியநத்தம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேருக்கு டிஸ்க் பிரேக்குடன் இரும்பு சக்கரங்கள்
எழுத்தின் அளவு:
ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேருக்கு டிஸ்க் பிரேக்குடன் இரும்பு சக்கரங்கள்

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2018
02:07

ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோவில் தேருக்கு, 7.50 லட்சம் ரூபாய் செலவில், டிஸ்க் பிரேக்குடன் இரும்பு சக்கரங்கள் தயார் செய்யும் பணிகள் நடைபெறு கின்றன.

ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், ஆண்டுக்கு இரண்டு முறை தேர் பவனி நடைபெறுவதால், தேரின் சக்கரங்கள் பழுதடைந்துள்ளன. இதனால், தேரை இயக்குவதிலும் சிரமம் ஏற்படுகிறது.இதையடுத்து, ஆதிகேசவப் பெருமாள் கோவில் தேரின் நான்கு மரச் சக்கரங்களையும் மாற்றி, இரும்பு சக்கரம் அமைக்க திட்ட மிடப்பட்டது. ராணிபேட்டை, பெல் நிறுவனத்தில், தேருக்கான இரும்பு சக்கரம் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.

இதுகுறித்து, கோவில் அதிகாரிகள் கூறுகையில், தேரின் நான்கு சக்கரங்களும், 7.50 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன தொழில் நுட்பத்தில் அமைக்கும் பணி நடைபெறுகிறது. நான்கு இரும்பு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட உள்ளது. இதனால், தேரை சிரமமின்றி, எளிமையாக கட்டுப்படுத்தலாம். இரும்பு சக்கரங்கள், ஒரு சில மாதங்களில் பொருத்தப்படும் என்றார்.

தேர் கூண்டு பணிக்கு, டெண்டர் அறிவிப்பு:

ஆதிகேசவப் பெருமாள் கோவில் தேர் கூண்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சாலை விரிவாக்கம் பணியின் போது அகற்றப்பட்டது. அதன் பின், மீண்டும் தேர் கூண்டு அமைக்கப்படவில்லை. இதனால், தேர் மழையிலும், வெயிலிலும் காய்ந்து வீணாகி வந்தது. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்திகளும் வெளியிடப்பட்டன. இந்நிலையில், 23 லட்சம் ரூபாய் மதிப்பில் தேர் கூண்டு அமைக்க, இந்து அறநிலைய துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான டெண்டர், 19ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து, விரைவில் தேர் கூண்டு அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; திருச்சூர் வடக்குநாதர் கோவிலில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் இன்று ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; வாணியந்தல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள  வள்ளி தேவசேனா சமேத செங்கல்வராய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar