காசி விஸ்வநாதர் கோவிலில் சிலைகளை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜன 2012 11:01
புதுச்சேரி : ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோவில் கோபுரத்தில் உடைக்கப்பட்டு, அலங்கோலமாக உள்ள சிலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சியில் புராதன சிறப்புமிக்க காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை, பிரம்மாவும், சூரிய பகவானும் பூஜை செய்து தரிசித்தனர் என்றும், காசி விஸ்வநாதர் கோவிலை விட இங்கு வீசம் அதிகம் எனவும், இதன் அருகில் ஓடும் சங்கராபரணி ஆறு, கங்கை நதிக்கு சமமான புண்ணிய நதியாகவும் கூறப்படுகிறது. இத்தகு பெருமை வாய்ந்த இக்கோவிலுக்கு கடந்த 2005ம் ஆண்டு கும்பாபிஷே கம் நடத்தப்பட்டது. அப்போது புனரமைக்கப்பட்ட கோபுரத்தில் உள்ள சிலைகள் உறுதியாக இருக்கும் வண்ணம், செப்புக் கம்பிகள் பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், ஆள் நடமாட்டம் இல்லாத இரவு நேரங்களில், கோவில் கோபுரத்தில் உள்ள சாமி சிலைகளை உடைத்து, அதிலுள்ள செப்புக் கம்பிகளை திருடிச் சென்றுள்ளனர். இதனால் கோவில் கோபு ரங்களில் உள்ள பெரும்பாலான சிலைகள் கை மற்றும் கால்கள் உடைந்த நிலையில் அலங்கோலமாகக் காணப்படுகின்றன. இது, கோவிலுக்கு வரும் பக்தர்களை வேதனையடையச் செய்கிறது. இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் உடைக்கப்பட்டுள்ள சாமி சிலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.