திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி விழாக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2018 01:07
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி 11ல் பவுர்ணமி பூஜை, 20ல் கார்த்திகை, 24ல் மகா பிரதோஷம், 25ல் 1008 விளக்கு பூஜை, 28ல் ஆடிப்பூரம் விழா நடக்கிறது.திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் செவ்வாய் கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு ராகு கால அபிஷேகம், பூஜைகள், ஆடி 25ல் மீனாட்சி அம்மனுக்கு புஷ்பாஞ்சலி, ஆடிப்பூரம் விழா நடக்கிறது.ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் ஆடி மாதம் முழுவதும் காலையில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. எஸ்.ஆர்.வி., நகர் கல்கத்தா காளி அம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், விளக்கு பூஜை நடக்கிறது. மற்ற வெள்ளிக்கிழமைகளில் பூஜை, கூழ் ஊற்றுதல் நடக்கிறது.