பதிவு செய்த நாள்
17
ஜூலை
2018
01:07
சேலம்: சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆடிப் பண்டிகைக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடந்தது. சேலத்தில், பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆடிப்பண்டிகை ஆண்டுதோறும் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது, கோவிலில் பாலாலயம் நடப்பதால், கடந்த மூன்று ஆண்டுகளாக, பண்டிகை நாட்கள் குறைக்கப்பட்டு, விழா நடத்தப்படுகிறது. ஆடிப்பண்டிகை வரும், 24ல் பூச்சாட்டுதலுடன் துவங்குவதை முன்னிட்டு, நேற்று காலை முகூர்த்தக்கால் நடப்பட்டது. விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம், பூஜைகள் நடந்தன. தொடர்ந்து முகூர்த்தக்கால் நடப்பட்டது. தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சக்திவேல், முன்னாள் மேயர் சவுண்டப்பன் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள், கோவில் உதவி கமிஷனர் உமாதேவி, நிர்வாக அதிகாரி மாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.