பதிவு செய்த நாள்
17
ஜூலை
2018
01:07
கோவை;ஆடி மாதத்தை முன்னிட்டு, கோவை ராம்நகர் ஐயப்பன் பூஜா சங்கம் சார்பில், ஆடி உத்சவம் என்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி, இன்று துவங்கி, ஆக.,15ம் தேதி வரை தினமும், மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை நடக்கிறது. முதல் நிகழ்ச்சியாக, நாளை முதல் 19ம் தேதி வரை, ரமண பாரதி சைதன்யா கிருஷ்ண ஜகந்நாதன் மகான்களின் பாதையில் தர்மத்தின் குரல் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றுகிறார். 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை, கம்பம்பட்டி சுப்ரமணியம், பகவான்! பக்தி! பக்தர்! என்ற தலைப்பிலும், 23 முதல் 26ம் தேதி வரை, பேராசிரியர் ராஜாராமன், ஸ்ரீ ஜகத்குரு ஆதிசங்கரர் என்ற தலைப்பிலும், 27 முதல் 31ம் தேதி வரை, துஷ்யந்த் ஸ்ரீதர், விராட பர்வம் என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றுகின்றனர். ஆக.,1 முதல் 4ம் தேதி வரை, ராமமூர்த்தி, ஸ்ரீமத் ராமாயணம் - விபீஷணர் கதை என்ற தலைப்பிலும், 5 முதல் 11ம் தேதி நொச்சூர் வெங்கட்ராமன், பகவத் கீதையில் 16வது அத்தியாயம் குறித்தும், ஆக., 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை, தஞ்சை ஜெயந்தி ஜானகிராமன், பத்ராசல ராமதாசர் மானம் காத்த கண்ணன் என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றுகின்றனர். நிறைவு நாளான ஆக., 15ம் தேதி, கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும் என்ற தலைப்பில், விசாகா ஹரி சொற்பொழிவாற்று கிறார்.
ஐயப்பன் பூஜா சங்க நிர்வாகிகள் கூறுகையில், தொடர் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகளுடன், ஆடி வெள்ளிக்கிழமைகளில், சிறப்பு பகவத் சேவை வழிபாடு நடக்கிறது. பங்கேற்க விரும்புவோர், வரும் 18ம் தேதிக்குள்ளாகவோ அல்லது பங்கேற்க விரும்பும் தினத்துக்கு முன்பாகவோ, பூஜைக்கான சங்கல்ப கட்டணம், 1,000 ரூபாய் செலுத்தி, பெயரை முன்பதிவு செய்து குடும்பத்தினருடன் பங்கேற்கலாம் என்றனர்.