சக்தி பீடங்களில் ஒன்றான திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் அகிலாண்டேஸ்வரி அருள் பாலிக்கிறாள். இந்த அம்மனின் காதுகளில் உள்ள தோடுகளில் ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். ஆடி வெள்ளியில் ஸ்ரீ வித்யா பூஜை வைதீக முறைப்படி இங்கு நடத்துகின்றனர். இந்த அம்மன் மாணவியாக இருக்க, சிவபெருமானே குருவாக இருந்து உபதேசம் செய்வதால் மாணவர்கள் வழிபட்டால் கல்வி வளர்ச்சி உண்டாகும்.