பதிவு செய்த நாள்
18
ஜூலை
2018
12:07
குமாரபாளையம்: குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், ஆடி 1 திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அம்மன் நகர், ஐயப்பன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதே வளாகத்தில் உள்ள விநாயகர், மஞ்சமாதா, முருகன், நாகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு பூஜைகள் நடந்தன. காட்டூர், பண்ணாரி மாரியம்மன் கோவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, ஆராதனை நடந்தது. குமாரபாளையம் காளியம்மன் கோவில், கள்ளிபாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், காவேரி நகர் காளியம்மன் கோவில், குமாரபாளையம் வட்டமலை முருகன் கோவில், பாலமுருகன் கோவில், தம்மண்ணன் வீதியில் உள்ள தேவாங்கர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.