தூத்துக்குடி இசக்கியம்மன் கோயிலில் சிறப்பு அன்னதானம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2012 12:01
தூத்துக்குடி:தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் கோயிலில் தை மாதத்தை ஒட்டி அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் மிகப் பெரிய அளவில் அன்னதானம் நடக்கிறது. அன்று விசேஷ பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற வேம்படி இசக்கியம்மன் கோயிலில் ஒவ்வொரு விழாக்களும் நடந்து வருகிறது.தற்போது கோயிலில் அரசு சார்பில் தினமும் 50 பேருக்கு அன்னதானம் வழங்க உத்தரவிட்டிருப்பதால் அன்னதானம் நடந்து வருகிறது. இதற்காக டேபிள், சேர்கள் கோயில் நிதியில் இருந்து வாங்கப்பட்டு சேர், டேபிள் மூலம் அன்னதானம் நடந்து வருகிறது. அன்னதான கூடம் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. கோயில் அருகே இவை கட்டப்படுவதால் பணிகள் முடிந்தவுடன் இனிமேல் அங்கு வைத்து இலவச அன்னதானம் வழங்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையில் தற்போது தை மாதத்தை ஒட்டி கோயிலில் தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விசேஷ அபிஷேங்கள், தீபாராதனைகள், சிறப்பு அர்ச்சனைகள், பூஜைகள் நடக்கிறது.இந் நிலையில் தை மாத வெள்ளிக்கிழமை தோறும் மிகப் பிரமாண்டமான முறையில் அன்னதானம் தனியார் பங்களிப்புடன் கோயிலில் நடக்கிறது. ஆயிரக்கணக்கானோர் அன்னதானம் சாப்பிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. வரும் 27ம் தேதி வெள்ளிக்கிழமை மெகா அன்னதானம் உபயதாரர் சுந்தரி மெடிக்கல் சார்பில் இரவு 7 மணிக்கு வழங்கப்படுகிறது.இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கோபாலன் தலைமையில் ஊழியர்கள் ஜெகநாதன், குருசாமி, சுப்பிரமணியபட்டர், மாடசாமி மற்றும் பலர் செய்து வருகின்றனர்.தொடர்ந்து தைமாதம் முடிய நான்கு வெள்ளிக்கிழமைகளிலும் ஒவ்வொரு உபயதாரர்கள் சார்பில் மெகா அன்னதானம் நடக்கும் என்று அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.