டி.கல்லுபட்டி, பேரையூர், டி.கல்லுப்பட்டி, வன்னிவேலாம்பட்டி, சத்திரப்பட்டி, கிளாங்குளம், வி.அம்மாபட்டி, காடனேரி, கண்டியதேவன்பட்டி, குன்னத்தூர், சின்னாரெட்டிபட்டி, முத்தப்பன்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆடிமாத 2ம்நாள் பாரிவேட்டை திருவிழா நடந்தது. கண்ணப்பநாயனார் சிவனுக்கு கண் கொடுத்த நிகழ்ச்சியை நினைவுகூறும் வகையில் 10 - 60 வயது வரை உள்ள ஆண்கள் புதர்கள் மற்றும் காடுகளில் வேட்டையாடினர்.