பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த மேலப்பாளையத்தில் உள்ள ஓசூர் அம்மன் கோவிலில் விநாயகர், பெரியாண்டவர், நாகர், புற்றுவாய் அம்மன் கோவிலில் மஞ்சள், குங்குமம் இடும் மங்கள நிகழ்ச்சி நடந்தது. அதனையொட்டி, நேற்று முன்தினம் 19ம் தேதி மதியம் 2:00 மணிக்கு செல்வ விநாயகர், நாகர், புற்றுவாய் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அரசு, வேம்பு மரங்களுக்கு மஞ்சள், குங்குமம், இட்டு வழிபாடு நடத்தும் நிகழ்ச்சியும், இரவு மகா தீபாராதனையும் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.