சென்னிமலை: ஆடி முதல் வெள்ளியை ஒட்டி, சென்னிமலை, முருங்கத்தொழுவு கிராமத்தில் உள்ள, ஸ்ரீவாகை தொழுவு அம்மன் கோவிலில், குத்து விளக்கு பூஜை நடந்தது. முன்னதாக மஹா கணபதி ஹோமம், கோ பூஜை நடந்தது. குத்து விளக்கு பூஜையில், 501 பெண்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து அம்மன் திரிசதி அர்ச்சனை வழிபாடு, மகா அபி?ஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பூஜைகளை சிவஸ்ரீ அமிர்தலிங்க குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்தனர். சென்னிமலை டவுன் மாரியம்மன் கோவில் நடந்த, சிறப்பு பூஜையில், திரளான பெண்கள் கலந்து கொண்டனர். பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது.