நடராஜர் கோவில் ராஜகோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகள் அகற்றப்படுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2012 12:01
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் பழமை வாய்ந்த ராஜகோபுரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிதம்பரத்தில் புகழ் பெற்ற நடராஜர் கோவிலின் நான்கு வாயில்களிலும் 140 அடி உயரமுள்ள ராஜகோபுரங்கள் உள்ளது. சிற்பக்கலை நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள இக்கோபுரங்கள் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கோபுரங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் அதிக அளவில் செடிகள் வளர்ந்துள்ளது.கடந்த ஆண்டு செடிகள் அகற்றப்பட்டது. ஆனால் தொடர்ந்து பராமரிக்கப்படாததால் தற்போது மீண்டும் தெற்கு கோபுரம், மேல கோபுரம், வடக்கு கோபுரங்களில் செடிகள் வளர்ந்து கோபுரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளது.பழமையான வரலாற்றுச் சின்னங்களாக ராஜகோபுரங்களை பாதுகாக்க செடிகளை முற்றிலும் அகற்றி பாராமரிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.