Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நடராஜர் கோவில் ராஜகோபுரத்தில் ... வேணுகோபால சுவாமிக்கு 30ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலை கட்டியது யார்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2012
12:01

ஓசூர்: ஓசூர் மலை மீதுள்ள சந்திரசூடேஸ்வரர் கோவிலை கட்டியது சோழ மன்னரா? கிருஷ்ணதேவராயரா? என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓசூர் மலை மீது சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், 800 ஆண்டுக்கு முந்தைய பழமையான கோவில். கோவில் அடிவாரத்தில் ஆண்டு முழுவதும் வற்றாத பச்சை குளம் உள்ளது. கோவிலில் மூலவர் சந்திரசூடேஸ்வரர், சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். கோவில் உட்பிரஹாத்தில் ஜலகண்டேஸ்வரர் லிங்கம் சிறப்பு வாய்ந்தது. மழையில்லாத காலத்தில் இந்த லிங்கத்துக்கு சிறப்பு வழிபாடு நடத்தினால், மழை பெய்யும் என்பது பக்தர்களுடைய ஐதீகமாக இருந்து வருகிறது. கோவிலின் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்விழாவில், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டத்தை சேர்ந்த லட்சணக்கான பக்தர்கள் கூடுவது தனி சிறப்பு. அழகிய கலை வேலைபாடுகளுடன் கூடிய கற்களை கொண்டு கோவில் கட்டப்பட்டுள்ளதாலும், மலை மீது அமைந்துள்ளதாலும் இக்கோவில் வரலாற்று சிறப்பு மிக்க கோவிலாக கருதப்படுகிறது. இந்த கோவிலில் தற்போது, டி.வி.எஸ்., நிறுவனம் சார்பில், 2 கோடி ரூபாய் மதிப்பில், ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக, கோவிலின் முன் பகுதியில் இருந்த சிறிய அலங்கார கோபுர வளைவு மற்றும் கற்தூண்கள் இடிக்கப்பட்டு வருகிறது. சிவன் கோவில்களில் ஏழு நிலைகள் கொண்ட கோபுரம், முதல்முதலாக ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் அமைவதால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த கோவிலின் வரலாற்று சிறப்பு மிக்க பழங்கால தூண்களை இடிக்க உள்ளூர் தெலுங்கு அமைப்புகள் பகிரங்க எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தபோவதாக அறிவித்துள்ளன. அவர்கள், "கோவிலை தங்களுடைய தெலுங்கு வம்சா வழியான கிருஷ்ணதேவராயர் மன்னர் தான் கட்டினார். அதனால், எங்கள் ஆலோசனையை கேட்காமல் எப்படி இடிக்கலாம் என, போர்க்கொடி உயர்த்தி கோபுர திருப்பணியை நடத்த கூடாது என கூறி வருகின்றனர். பதிலடியாக, தமிழ் அமைப்பினர், "சந்திரசூடேஸ்வரர் கோவிலை தங்களுடைய வசம்சா வழியான சோழ மன்னர் ஆட்சியில் ராஜேந்திரசோழர் தான் கட்டினார். அதற்கான ஆதாரங்கள் உள்ளது, அதனால், கோவிலின் பெருமைகள் தெரியாதவர்கள், தங்களுடைய சுய விளம்பரத்துக்காக, இந்த திருப்பணியை தடுக்க முயற்சி செய்கின்றனர். திருப்பணி தொடரவும், செயல்படுத்தவும் துணை நிற்போம் என நோட்டீஸ் அடித்து பொதுமக்கள் மத்தியில் விநியோகம் செய்து வருகின்றனர். இதனால், தற்போது சந்திரசூடேஸ்வரர் கோவிலை கட்டியது சோழமன்னர் ஆட்சியிலா? அல்லது கிருஷ்ணதேவராயர் ஆட்சியிலா? என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து கோவில் செயல்அலுவலர் சிவக்குமார் கூறுகையில்,""கோவில், 12ம் நூற்றாண்டில் ஹொய்சாளர் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. கோவில் கண்டிப்பாக சோழ மன்னர் மற்றும் கிருஷ்ண தேவராயர் மன்னர் ஆட்சியில் கட்டப்படவில்லை, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: பிரசாந்தி நிலையத்தில், இன்று (நவ., 23) சத்ய சாய்பாபா பிறந்த நாள் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சின்னமனூர்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சின்னமனூர் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயிலில் ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அருகே உள்ள சின்னத்தொட்டி பாளையம் வெல்லாதி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அமிர்தவர்ஷினி ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையில் உள்ள கெட்வெல் ஆஞ்சநேயர் கோயிலில் இன்று சனிக்கிழமை சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
அன்னூர்; திம்மநாயக்கன்புதூர் மகா பைரவர் கோவிலில், இன்று (23ம் தேதி) ஜென்ம அஷ்டமி விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar