பெண்ணாடம்: பெண்ணாடம் வீற்றிருந்த பெருமாள் கோவிலில் 108 கோ பூஜை நடந்தது. அதனையொட்டி நேற்று காலை 7:00 மணியளவில் மூலவர் வேதவல்லி தாயார் சமேத வேதநாராயண பெருமாள் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், திரவியபொடி ஆகிய பொருட்களால் அபிேஷகம்; காலை 10:30 மணியளவில் கோவில் முன் 108 பசுக்களுக்கு கோ பூஜை; 11:15 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வேதவல்லி தாயார் சமேத வேதநாராயண பெருமாள் சுவாமி சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.