நடுவீரப்பட்டு: குமளங்குளம் ஞானமுத்தாலம்மன் கோவிலில் நேற்று முன்தினம் மண்டலபிேஷக பூர்த்தி விழா நடந்தது. நடுவீரப்பட்டு அடுத்த குமளங்குளம் ஞானமுத்தாலம்மன் கோவிலுக்கு கடந்த ஜூன் மாதம் 3 ம் தேதி மகா கும்பாபிேஷகம் நடந்தது. அன்று முதல் தினமும் மண்டலாபிேஷகம் நடந்தது வந்தது. நேற்று முன்தினம் 21ம் தேதி மண்டலபிேஷக பூர்த்தி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு சிறப்பு ேஹாம பூஜைகள் நடந்து,12:00 மணிக்கு ேஹாமத்தில் வைக்கப்பட்ட கலசங்கள் கோவிலை வலம் வந்து அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. இரவு அம்மன் வீதி உலா நடந்தது.